சமூக வலைதளங்களில் இந்து முஸ்லிம் பற்றிய அவதூறு பரப்பியதாக திருச்சி மாவட்டம் துவாக்குடி நகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்குமார் மீது துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துவாக்குடி வடக்கு மலை அக்பர் சாலையை சேர்ந்தவர் ஜெய்னுத்தீன் (51). இவர் திமுக மாவட்ட பிரதிநிதியாகவும், துவாக்குடி மாற்றும் பள்ளிவாசல் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் துவாக்குடி வடக்கு மலை சொசைட்டி தெருவை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார் (40) இவர் அதிமுக துவாக்குடி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக உள்ளார்.
இவர் சமூக வலைதளங்களில் இந்து மற்றும் முஸ்லிம் இடையே மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் திமுகவில் உள்ள முஸ்லிம்ங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் துவாக்குடி நகராட்சி தலைவர் காயம்பு பினாமியாக ஜெய்னுத்தீன் இருப்பதாகவும் கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்
இப்படி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி ஒற்றுமைக்கு சீர்குலைத்து வரும் செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துவாக்குடி காவல் நிலையத்தில் ஜெயினுத்தீன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments