கடந்த 24.01.23-ந்தேதி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை மற்றும் வரகனேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, இரண்டு இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தும், வழக்கின் எதிரியான ராஜேந்திரன் (எ) ராஜேஷ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேலும் விசாரணையில், எதிரி ராஜேந்திரன் (எ) ராஜேஷ் மீது பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே எதிரி ராஜேந்திரன் (எ) ராஜேஷ் என்பவர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரி ராஜேந்திரன் (எ) ராஜேஷ் (IMMORAL TRAFFIC OFFENDER) என்பவர் மீதான குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவலின் கீழ் அடைக்கப்பட்டார்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments