தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பரப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதனிடையே தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை மறுதினம் ஏப்ரல் 16ஆம் தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மரக்கடை பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளது. இதற்காக மரக்கடை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது ரமலான் மாதம் நடைபெற்று வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணியும் நடைபெறவுள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்படவுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments