Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், வேங்கூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.18.80 இலட்சம் மதிப்பீட்டில் வேங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும்,

15வது நிதி குழு மான்யம் நிதியின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தரைமட்ட நீர்தேக்க தொட்டியின் கட்டுமானப் பணிகளையும், ஊராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.3.75 இலட்சம் மதிப்பீட்டில் வேங்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சுற்றுச்சுவர் கட்டும் பணியினையும், கிளியூர் ஊராட்சியில் 15வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.5.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சிறுபாலம் அமைக்கும் பணிகளையும். 15வது நிதி குழு மான்யம் நிதியின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளையும்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் ஆதிதிராவிடர் மேம்பாட்டுப் பணி திட்டத்தின் கீழ் ரூ.4.25 இலட்சம் மதிப்பீட்டில் கிளியூர் ஊராட்சியில் சுடுகாடு அமைக்கும் பணிகளையும், கீழமுல்லைக்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 4.10 இலட்சம் மதிப்பீட்டில் ஒட்டக்குடி கிளை வாய்க்கால் சீரமைத்து நீர் உறிஞ்சிக் குழிகள் அமைக்கப்படும் பணிகளையும், ரூ.6.40 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளையும், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 44.37 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதனைத் தொடர்ந்து, பனையக்குறிச்சி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கல்லணை லிங்க் சிமெண்ட் சாலை அமைக்கும ; பணிகளையும், ஏ.ஆர்.கே.நகரில் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.8.6 இலட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணிகளையும், நடராஜபுரம் ஊராட்சியில் ரூ.31.56 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் இரண்டு பள்ளிக் வகுப்பறைக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.4.29 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளையும், கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.86 இலட்சம் மதிப்பீட்டில் செம்மங்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த வட்டார நாற்றங்கால் மையத்தின் செயல்பாடுகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் செம்மங்குளம் கிராமத்தில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடை கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும்,

ரூ.8.14 இலட்சம் மதிப்பீட்டில் செம்மங்குளம் கிராமத்தில் சுடுகாடு பாதை மற்றும் பாலத்தின் கட்டுமானப் பணிகளையும், காந்தளுர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.5 இலட்சம் மதிப்பீட்டில் இலந்தைப்பட்டி கிராமத்தில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளையும், ரூ.10.2 இலட்சம் மதிப்பீட்டில் இலந்தைப்பட்டி கிராமத்தில் புதுக்குளம் மடை அமைத்தல் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவகாவும், தரமானதாகவும், முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், அசூர் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அரசங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்களின் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்தார். 

இந்நிகழ்வுகளில், உதவி செயற்பொறியாளர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமணி, கலைச்செல்வி, உதவிப் பொறியாளர் விஜயராணி, ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *