தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று முன்தினம் (18.04.2023) நடைபெற்றது.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சித்திரை தேரோட்டத்தில் கலந்து கொண்டு அக்னி சட்டி, பால்குடம், தீர்த்த குடம், முளைப்பாரி போன்ற நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர்.
இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட பாதயாத்திரை ஆக வந்த பக்தர்களிடம் பத்துக்கும் மேற்பட்ட தங்க நகைகள், இருசக்கர வாகனம், இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போய் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments