திருச்சியில் உலக கல்லீரல் தினம் இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி) அனுசரிக்கப்பட்டது. உலக கல்லீரல் தினமான இன்று திருச்சி அரசு பொது மருத்துவமனையில் இருந்து, திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லீரல் கோளாறுகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது, அந்த உறுப்பை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் பரவலாக ஏற்படுத்தும் வகையில், பேரணி நடத்தப்பட்டது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு இப்பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.

13 Jun, 2025
390
20 April, 2023










Comments