திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணப்பாறை நகர் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் நகரை சுற்றி 32 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிதாக அமைக்கப்பட்ட அறையை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன்,
மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி, மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், டாக்டர் கலையரசன், வழக்கறிஞர் கிருஷ்ணகோபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் CCTV கட்டுப்பாட்டு அறையில் கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து கட்டுப்பாட்டு அறையில் நிர்வாகிகளிடம் மாவட்ட கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில்…. மணப்பாறை நகர் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு போக்குவரத்து
விதிமுறைகள், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகனங்கள் மற்றும் பல்வேறு விதமான குற்றங்களையும் CCTV பதிவின் மூலம் எளிதில் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என கூறினார்.

13 Jun, 2025
388
20 April, 2023










Comments