பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்குவது போல் அங்கன்வாடியில் பயிலும் இரண்டு முதல் ஆறு வயது வரை உள்ள மாணவர்கள் நலன் கருதி மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்,
எரிவாயு சிலிண்டருக்கான தொகையை பில்லில் உள்ளவாறு முழுமையாக ரூபாய் 1205 அரசே வழங்க வேண்டும், 1993இல் பணிக்கு வந்த பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், 10 வருடம் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,
அங்கன்வாடி மையங்களின் மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும், லோக்கல் ட்ரான்ஸ்பர் உடனடியாக வழங்க வேண்டும். மேலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

13 Jun, 2025
388
20 April, 2023










Comments