திருச்சியில் திருவானைக்காவல், செம்பட்டு, மண்டையூர் மூன்று இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. அவர்களுக்கான அலுவலகம் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள டேப் காம்ப்ளக்ஸில் (Tab complex) செயல்பட்டு வருகிறது. வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது அங்கு சோதனையை துவக்கி உள்ளனர்.
காலை 7:00 மணியில் G square அலுவலகத்தில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் அலுவலகம் திறக்கபடாததால் வாசலில் காத்திருந்தனர்.
G square நிறுவனம் குறைந்த விலைக்கு இடங்களை வாங்கி அதிக விலைக்கு வீட்டு மனைகளாக பிரித்து விற்பதாக தகவல் கூறப்படுகிறது. சமீப காலத்தில் அதிகமான இடங்கள் வாங்கியது தொடர்பாகவும் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
G square ஊழியரிடம் விசாரணையை வாயிலில் நடத்தினர். பின்னர் அலுவலகம் திறக்கப்பட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்து தங்களது சோதனை துவக்கினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments