திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க கான்கீரிட் தளத்துடன் மேற்கூரையுடன் அதவத்தூர் மற்றும் இருங்கலூரில் ரூ.12.70 கோடி மதிப்பீட்டில் நவீன நெல் சேமிப்புத் தளங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டம் அதவத்தூரில் 14,000 மெ.டன், மணச்சநல்லூர் வட்டம் இருங்களுரில் 10,000 மெ.டன் என மொத்தமாக 24,000 மெ.டன், கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் நவீன நெல் சேமிப்புத் தளங்களை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் (11.02.2023) அன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதற்கட்டமாக ஸ்ரீரங்கம் வட்டம் அதவத்தூரில் 6,200 மெ.டன் மற்றும் மணச்சநல்லூர் வட்டம் இருங்களுரில் 5,400 மெ.டன் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரையுடனான நவீன நெல் சேமிப்புத் தளங்கள் திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (25.04.2023) தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அதவத்தூரில் 7,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் ன ளம் மற்றும் இருங்களுரில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்தார்.
அதவத்தூரில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி சேமிப்பு கிடங்கு வளாகத்தினை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) உ.முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் எம்.பாலமுருகன், செயற்பொறியர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் ராஜி,
வட்டாட்சியர் சிவக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments