திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மா மண்டபம் பகுதியில் ஏராளமான மக்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். இந்த நிலையில் அம்மா மண்டம் காவிரி ஆற்றில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
இதனை தொடர்ந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெண்ணிலா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் நல்லதம்பி மற்றும் ரவிக்குமார் ஆகியோர் காவிரி ஆற்றில் இறங்கி நடந்து சென்று அந்த சடலத்தை மீட்டனர். ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அந்த சடலத்தை சுமந்து வந்து பின்னர் அமரர் ஊர்தி மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றின் நடுவில் இறந்து கிடந்த சடலத்தை யாருடன் உதவி இல்லாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments