திருச்சி அரியமங்கலம் போலீசார் பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் இவர் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஆறு வழக்குகள் உள்ளது தற்பொழுது ஒருவரை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய வழக்கு திருச்சியில் மத்திய சிறையில் உள்ளார் இந்நிலையில் காவல் துணை ஆணையர் (தெற்கு) ஸ்ரீதேவி மற்றும் காவல் உதவி ஆணையர் காமராஜ் ஆகியோர் பரிந்துரையின் பேரில்
திருச்சி மாவட்ட காவல் ஆணையர் சத்யபிரியா உத்தரவின் படி அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் ரத்தினவேல் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments