Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எதிர்க்கட்சினா ஆளுநர் தேவை ஆளுங்கட்சினா ஆளுநர் தேவை இல்லை என்ன நிலைப்பாடு இது – திருச்சியில் ஆளுநர் தமிழிசை பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை பேட்டி.

 புதுச்சேரியில் பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். இரண்டு மணி நேரம் வெள்ளிக்கிழமையில் பெண்களுக்கான நேர சலுகை. மேலும் மாதம் ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்படாமல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

 தமிழகத்திலிருந்து ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் சிலர். ஜிப்மர் ஏழை மக்களுக்கான முற்றறிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது .எந்த வித மாற்று கருத்தும் இல்லை. வேண்டுமென்று அங்கே சில பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டும் என சில கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நிர்வாக ரீதியாக எல்லாவற்றையும் சரி செய்து வருகிறோம்.

 ஆளுநர் பதவி தேவையில்லை என்று சொல்கிறார்கள் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளான நிலையில் நமது அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் பதவி ஒன்று கொண்டு உள்ளது. ஆனால் இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஆளுநர் பதவி தேவையில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

எதிர் கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநர் தேவை இல்லை என்றால் ஏன் ராஜ்பவன் படியை மிதித்தார்கள். எதற்கெடுத்தாலும் ராஜ்பவன் சென்று புகார்களை கொடுத்தார்கள். எதிர்க்கட்சியாக இருந்த போது ஆளுநர் வேண்டும். ஆளும்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநர் வேண்டாம் என்பது என்னது .நீங்க ஒரு முடிவுக்கு வாருங்கள் ஆளுநர் வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள். எண்ணத்தில் நிலையற்ற தன்மை உள்ளது.

 நான் தேர்தல் பற்றி கருத்து சொல்ல மாட்டேன். அரசியல் ரீதியாக சில கருத்துக்களை சொல்வதை யாரும் தடுக்க முடியாது. கருத்துரிமை இருக்கிறது சாதாரண மனிதனுக்கு கருத்தரிமை இருப்பது போல ஆளுநருக்கு கருத்துரிமை இருக்கிறது. கருத்து சொல்வதில் யாரும் யாரையும் தடுக்க முடியாது. எதிர் கருத்து வேண்டாம் .

சொல்லுங்க ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல கூடாது என்பது முடியாது. ஆளுநரை விமர்சனம் செய்தால் அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். நம் கருத்து உரிமை என்பது நமக்கு வேண்டிய கருத்துக்கள் சொல்லப்பட்டால் அது கருத்து உரிமை. அது திரைப்படத்திலும் வந்தால் சரி. ஆனால் வேண்டாத பத்தி சொன்னால் அது திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்.

 இன்னொரு சமூகத்தை குறை சொன்னாலும் பரவாயில்லை எனக்கு வேண்டாத கருத்துகளை இன்னொரு சமூகத்து குறை சொன்னால் அதற்கு கருத்து உரிமையில் கருத்து ஒற்றுமை இல்லை என்பது தான் உண்மை. ஒரு சட்ட மசோதா பற்றி பேச முடியாது. பல காரணங்கள் இருக்கலாம். ஆளுநர் அதை அலசி ஆராய்ந்து

முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது.

 இந்த ஒரு சட்டத்தை(ஆன்லைன்) குறிப்பிடவில்லை.அதற்க்கு விமர்சனம் செய்து கொண்டிருக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுக்கு பாலாமாக, பலமாக ஆளுநர்கள் இருக்கிறார்கள். ஆளுநர்களே ஆளுநர்கள் போல் நடத்தாமல் அவர்களை செயலாற்றுங்கள் என்று சொல்வது எப்படி என்பது என் கருத்து. அரசாங்கம் ஆளுநர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர் சில கருத்துக்களை சொல்லும் பொழுது

எதிர் கருத்து சொல்ல உரிமை உள்ளது.

 ஆனால் கடுமையாக விமர்சனம் செய்வது சரியல்ல என்பது எனது கருத்து .

த கேரள ஸ்டோரி படம் பற்றி பேச கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் .அதை நான் பார்க்க வேண்டும் தான் உள்ளேன். தீவிரவாதம் எந்த இடத்தில் இருந்தாலும் அதை அழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சிலர் எது கருத்துக்களை சொல்கிறார்கள் சுதந்திரம் உள்ளது. மற்ற நேரங்களில் இதனை திரைப்படமாக பார்க்க வேண்டும் என்கிறார்கள். இப்பொழுது மட்டும் தடை கேட்கிறார்கள். தீவிரவாதம் எந்த விதத்திலும் யாரையும் பாதித்துவிடக்கூடாது. பாரத பிரதமர் அதைதான் வலியுறுத்தி உள்ளார்.

  நானும் அந்த படத்தை பார்க்க போகிறேன்.அடிக்கடி திரும்பத் திரும்ப அறிவிப்புகளை கொடுக்கும் அரசை பார்த்திருக்கும்.ஆனால் அறிவிப்பை கொடுத்து திரும்பப் பெறும் அரசாக திமுக அரசு உள்ளது என்பது எனது கருத்து என தெரிவித்தார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *