Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறுதானிய உணவு திருவிழா

திருச்சி சமயபுரத்தில் முதன்முறையாக மிக பிரம்மாண்டமான ஒரு உணவு திருவிழா 5/5/2023 அன்று நடைபெற்றது2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டதையொட்டி

கே ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் வேதியல் துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் மாணவர்களின் எக்ஸ்னோரா சார்பில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் ENVIRON’23 (5.5.23) அன்று நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர்  பிரதீப்குமார் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் நடத்தப்பட்ட சித்த மருத்துவ மூலிகை கண்காட்சியையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவியர்கள் இவ்விழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் விழாவில் இறுதியில் வழங்கப்பட்டது. சிறுதானிய சமையல் போட்டிகள், மூலிகை கண்காட்சிகள், கைவினை பொருட்களின் கண்காட்சிகள்,மரக்கன்று கண்காட்சி, சிறுதானிய வகைகள் கண்காட்சிகள், பாரம்பரிய அரிசி வகை கண்காட்சிகள், சித்த மருத்துவ முகாம்கள், இயற்கை உணவு கண்காட்சிகள், இயற்கை மருத்துவ குறிப்புகள் போன்ற பல்வேறுப்பட்ட கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன .

விருது வழங்கும் விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அன்றைய விழாவில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் ஆரோக்கியமான சிறுதானிய உணவை எடுத்துக் கொண்டதன் மூலம் ஜெட்லி புக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு ஜெட்லி அவர்கள் உலக சாதனை கேடயத்தை கல்லூரிக்கும், முதல்வர்அவர்களுக்கும் வழங்கினர்.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து இவ்விழாவை திறம்பட நடத்திக் கொடுத்தனர்.

சிறுதானிய உற்பத்தியே மேம்படுத்துதல் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மற்றும் இன்றைய சமூகத்தின் சிறுதானிய உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் வகையில் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு முயற்சியாக இத்திருவிழா நடத்தப்பட்டது.

கல்லூரி நிர்வாக இயக்குனர் முனைவர். குப்புசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கி காவேரி மருத்துவமனை சார்பாக திரு. ஆன்றோஸ் நித்திய தாஸ் அவர்கள் மாலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் தேவராசு. சீனிவாசன் விழாவின் அனைத்து ஏற்பாடுகளை சிறப்பாக திறம்படு செயல்படுத்தி விழாவை மிகப் பெரிய வெற்றி விழாவாக உருவாக்கியுள்ளார். வேதியல் துறை தலைவர் M. தாமரைச்செல்வி  முதல்வரின் வழிகாட்டுதல் படி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து சிறுதானிய உணவு திருவிழாவை மிகப்பெரிய வெற்றி விழாவாக மாற்றியுள்ளார். கல்லூரி முதல்வர் தேவராசு சீனிவாசன் அனைத்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாராட்டினார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *