திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவர் கே.கே நகர் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் கருமண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது அரிஸ்டோ மேம்பாலத்தில் கீழ் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.
அப்பொழுது காரில் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை கண்ட அவர் உடனடியாக காரை பெட்ரோல் நிலையத்திலிருந்து சாலைக்கு ஓரமாக நிறுத்தினார். பின்னர் காரின் முன் பகுதியில் இருந்து தீ எரிய தொடங்கியது. இதைக் கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீ தடுப்பு உபகரணங்களை கொண்டு தீயை அணைத்தனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீப்பற்றாமல் இருப்பதற்காக காரின் முன் பகுதி முழுவதும் நீரை பீய்ச்சினர். இந்த தீ விபத்து குறித்து கண்டோன்மென்ட் போக்குவரத்து தெற்கு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முகமது இப்ராஹிம் வேறொருவரிடம் இந்த காரை விலைக்கு வாங்கி ஒரு மாதம் தான் ஆகி உள்ளது. இந்த நிலையில் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் தீ பற்றியதை அறிந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 10 May, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments