திருச்சி தாயனூர், கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது: 77). இவர் சேமரசம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில்…. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
இதில் ஒருவரை மட்டும் உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். சந்திரா என்பவள் தான் உள்ளூரில் இருந்து வசித்து வருகிறாள். எனது மகள் சந்திரா கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறாள் என்பதால், அவளுக்கு 2 செண்டு இடம் எழுதிக் கொடுத்துள்ளோம் வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் எழுதிக் கொடுத்துள்ளேன்.
எனக்கு இப்போது வயதாகி விட்டது என்பதால் மீதமுள்ள சொத்துக்களை என்னுடைய மூன்று மகள்களுக்கும் சொத்துக்களை பாகம் பிரித்து கொடுக்கலாம் என்று நினைத்த பொழுது என்னுடைய மொத்த சொத்துக்களையும் எங்களிடம் ஏமாற்றி எழுதி வாங்கியது தெரியவந்தது. ஆனால் அவள் என்னையும் மற்றும் மீதமுள்ள மூன்று மகள்களையும், ஏமாற்றி மொத்த சொத்துக்களையும் எழுதி வாங்கி விட்டாள்.
இது சம்பந்தமாக மாவட்ட சமூக நல அலுவலர் முன்பாக மனு கொடுத்துள்ளோம் அதன் அடிப்படையில் எங்களிடம் விசாரணை செய்த பொழுது எங்களை ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்துக்களை ரத்து செய்ய வேண்டும் என்று எங்களுடைய கோரிக்கையை கூறினோம். பிறகு அதன் அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலகத்திலிருந்து எங்களிடம் ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்துக்களை ரத்து செய்ய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இப்படி இருக்கும் சமயத்தில் எனக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் என்னுடைய கடைசி மகள் பானுமதி என்னிடம் வாழ்ந்து வருகிறாள் மற்றும் உண்ண உணவும் மற்ற வசதிகளை எனக்கு செய்து வருகின்றனர். (26.04.2023) அன்று மதியம் 3 மணியளவில் எனது மகள் சந்திரா என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவள் கூறியது உனக்கு இங்கு இருக்க இடமும் கிடையாது ஓடுடி என்று தகாத வார்த்தையில் பேசி, என்னை எட்டி உதைத்தனர் மற்றும் ரொம்ப மன உழைச்சலுக்கு ஆளாக்கி கொண்டு விட்டார் மற்றும் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுகிறாள்.
எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் என்னுடைய மகள் சந்திரா தான் காரணம். ஆகையால் உயர்திரு காவல்துறை ஆய்வாளர் அவர்கள், எனக்கு பாதுகாப்பு வழங்கி மற்றும் என்னிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments