திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள தவுட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்திகா (17). இவர் கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக மன உளைச்சலில் இருந்த பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாதக  கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து புலிவலம் போலீசார் அவரது வீட்டுக்கு நேரில் சென்று கீர்த்திகாவின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் .
மேலும் இது தொடர்பாக புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 11 May, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments