திருச்சி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாட்டம். ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (12.05.2023) திருச்சி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவமனை முதல்வர் நேரு தலைமையில் உலக செவிலியர் தின விழா கேக் வெட்டிக் கொண்டாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் ராஜ், மருத்துவமனை தலைமை செவிலியர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments