மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் பாஜக அரசை அகற்றுவோம் இந்தியாவை பாதுகாப்போம் என்கின்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய நடைபயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் தலைமையிலும்,நகர துணை செயலாளர் மரியராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரஹ்மத்துனிசா, நல்லுசாமி, முன்னிலை வகித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது சிறப்புரை உரை நிகழ்த்தி நடைபயண பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கிளர்ச்சி பிரச்சாரக் குழு உறுப்பினர் இந்திரஜித், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி, ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மதனகோபால் ,திராவிடக் கழக நகர செயலாளர் சி எம் எஸ் ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் சபுரலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் பக்ருதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்,
இதில் பொது மக்களிடம் புதிய கல்விக் கொள்கை தொழிலாளர் சட்ட திருத்தம் ,வேளாண் சட்டம் மின்சார திருத்த சட்டம், வனப்பாதுகாப்பு சட்டம் ,மோட்டார் வாகன , மத்திய உணவு பாதுகாப்பு சட்டம் என்று மக்களை ஏமாற்றி கார்பரேட்டுகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் விசுவாசம் காட்டும் பாஜக அரசை அகற்றிடுவோம்,
நாட்டின் சொத்துக்களான பொது துறைகளையும் விமான நிலையம் துறைமுகங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாஜக அரசை அகற்றிடுவோம்,
உணவுப் பொருட்களில் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பு இதனால் விலைவாசி உயர்வு நடுத்தர தொழில் நசிவு பண மதிப்பிழப்பு மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களின் சேமிப்புகளை சுரண்டிய பாஜக அரசை அகற்றிடுவோம்
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு என ஒவ்வொரு இந்திய குடிமகன் தலை மீதும் ஒரு லட்சம் கடன் வாங்கி வைத்திருக்கும் பாஜக அரசை அகற்றிடுவோம் என பிரச்சாரம் செ ய்து அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை விநியோகம் செய்தனர் .
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments