Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நரிகுறவர் இனமக்களை அலைக்கழிக்கும் சார் ஆட்சியர்

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பழங்குடி இன மக்களான நரிக்குறவர்கள் சுமார் 124 குடும்பங்களை சேர்ந்த 390 நபர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் தொடக்கக் கல்வி முதல் உயர்நிலை கல்வி வரை கல்வி பயின்று வருகின்றனர். ஜாதி சான்றிதழ் வேண்டி துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி ஆன்லைன் மூலம் மனு அளித்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ஒப்புதல் கடிதத்தை வட்டாட்சியர் வனஜாவிடம் வழங்கி உள்ளனர். ஆனால் வட்டாட்சியராக பணிபுரியும், வனஜா பழங்குடி இனச் சான்றிதழ் வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், தான் தங்கள் மனுவை முசிறி ஆர்டிஓவிடம் அனுப்பி வைப்பதாகவும், முசிறி சார் ஆட்சியரை சென்று பார்க்குமாறு மனுதாரரிடம் கூறி உள்ளார். 

மனுதார்கள் முசிறி சார் ஆட்சியர் மாதவனை பார்க்கச் சென்றனர். மாதவன் மனுதாரர்களிடம் அவர்களுடைய பூர்வீக சந்ததியினர் வழி தோன்றல் முறைகள் வேண்டும் என்று மனுதாரர்களை திருப்பி அனுப்பி உள்ளார். நரிக்குறவர் இன மக்களை எஸ்.டி பிரிவில் சேர்த்து ஜாதி சான்றிதழ் வழங்கிட விஜயன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

மனுவை விசாரித்த ஆட்சியர் சார் ஆட்சியர் மற்றும் கோட்டாச்சியருக்கு உடனடியாக நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இதுவரை சார் ஆட்சியர் மாதவன் நரிக்குறவரின் 17 குழந்தைகளுக்கு ஜாதி சான்று வழங்காமல் அலைகழித்து வருகிறார். தங்கள் குழந்தையின் எதிர்காலம் ஜாதி சான்றிதாலால். தடைப்படும் என வேதனை மக்கள் மனதில் எழுகிறது.

தமிழக அரசு 2023 ஜனவரி மாதம் 3 தேதி தமிழக அரசு அனைத்து வருவாய்த் துறையினருக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் திருத்தப்பட்ட சட்டம் 197 6 வரிசையி எண்ஜ்-37ல் நரிக்குறவர்கள் பழங்குடியினர் இன வகுப்பை சேர்ந்தவர் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பழங்குடியினர் என்று நரிக்குறவர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர்களுக்கு தமிழக அரசால் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *