கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) தொடக்க நாளில் மழை பெய்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்து வந்த நிலையில், மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. திருச்சியை பொறுத்தவரை 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மதியம் 12:00 மணி முதல் 4:00 மணி வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியே வருவதில்லை.
இந்த நிலையில் பகல் நேரங்களில் பெரும் சிரமத்திற்கு இடையே வாகனங்களை இயக்கி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னலில் திருச்சி மாநகர காவல் துறையினர் நிழற்கூரை அமைத்துள்ளனர்.
இதனால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். காவல்துறையினரின் இந்த நல்ல முயற்சிக்கு வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்பு தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
Comments