Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் பூ முதல் கார் வரை திருமண கண்காட்சி- மாடல்களின் அணிவகுப்பு

காலம் காலமாக தொடரும் இருமணம் இணையும் திருமண பந்தம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணம் இந்த நிகழ்வை மகிழ்ச்சியாக கொண்டாட வீட்டு கல்யாணம்’ என்ற 2 நாள் திருமண கண்காட்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

20 ஆயிரம் அடி சதுர உணவுக்கூடம், பல்வேறு வகை உணவு வகைகள், நவ நாகரீக ஆடைகள், நகைகள், கட்டில்கள் உள்ளிட்ட பர்னிச்சர்ஸ், போட்டோ ஆல்பம், திருமண பைகள், மணமகள், மணமகன் மேக்கப் உள்ளிட்ட 50 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளது. திருமணத்திற்கு தேவையான அனைத்து தேவைகள் மற்றும் வசதிகளும் ஒரே குடையின் கீழ் வழங்கும் வகையில் இந்த கண்காட்சி நடந்தது.

15 ரூபாயிலிருந்து 4500 வரை உள்ள திருமண அழைப்பிதழ்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். வேளாண் கண்காட்சி, அறிவியல் கண்காட்சி, கல்வி கண்காட்சி என பல்வேறு விதமான கண்காட்சிகள் நடைபெற்று இருக்கும். வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள் . 

ஒவ்வொருவரின் வாழ்வில் அந்த குடும்பத்தில் திருமணத்தில் நிகழ்வு மிக முக்கியமானது வரக்கூடிய உறவினர்களை கவனிப்பதில் இருந்து நண்பர்களை உபசரிப்பதென அனைத்து நிகழ்வுகளையும் தற்பொழுது செய்து தர ஏராளமானநிறுவனங்கள் எடுத்து நடத்த வந்துவிட்டன.

இந்நிலையில் அனைத்தையும் செய்து தர திருமணம் என்றால் மணமகன் – மணமகள் உடையிலிருந்து திருமண அரங்கு பூவினால் அலங்கரிப்பது முதல் கல்யாணத்துக்கு கொடுக்கும் பரிசு பொருளான கார் வரை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் ஒன்பது முறை இந்த கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் கோயம்புத்தூரில் எட்டு முறையும், முதன்முறையாக 10வது இடமாக திருச்சியிலும் கண்காட்சி நடத்தப்பட்டது.

தற்பொழுது பொதுமக்கள் திருமணத்தை ஆரம்பமாக நடத்த வேண்டும். அனைவரும் புருவத்தை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு அவர்களது இல்ல திருமணங்கள் அனைவரையும் பேச வைக்க வேண்டும் என்ற நிலையில் பொதுமக்கள் வந்துவிட்டனர்.

மணமகளுக்கு தேவையான உடை 25ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை இந்த கண்காட்சியில் இடம் பெற்றது. அவர்கள் நேரடியாகவே அந்த உடைகளை அணிந்த அது போன்ற உடைகளை பிரத்தியேகமாக வடிவமைத்து தருகின்றோம் என்கின்றனர் வடிவமைப்பாளர்கள். ஒய்யார நடையில் மாடல்கள் நடந்து வந்து கண்காட்சியை அசத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *