கள்ளச்சாராயம் என்ற வார்த்தை தற்போது தமிழகத்தை பரபரப்பாக்கி பேசும் பொருளாக்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் மதுபானத்தை கள்ள சந்தையில் வாங்கி குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகம் மேலும் பரபரப்பாக்கியது.
இது மட்டுமின்றி இந்த விவகாரம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20ல் சாராயக்கடை சந்து என்ற பெயர் பலகை உள்ளது. இந்தப் பெயர் பதிவு அரசு பதிவேட்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் கள்ளச்சாராயம் மற்றும் அரசு மதுபானம் குறித்த சர்ச்சை பேச்சு பரபரப்பான சூழ்நிலையில் சாராயக்கடை சந்து என்ற பெயர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதை அறிந்த நகராட்சி நிர்வாகம் இன்று(22.05.2023) இரவுக்குள் இந்த பெயர் பலகையாக அகற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments