திருச்சிராப்பள்ளி, உறையூர் ராஜேஸ் கண்ணா மளிகை, உறையூர் ஸ்ரீ நாகநாதர் டீ ஸ்டால், உறையூர் செந்தில் குமார் மளிகை, சாலை ரோடு குரு பீடா ஸ்டால் மற்றும் சாலை ரோடு ரவி டீ ஸ்டால் ஆகிய கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் R.லால்வேனா அவசர
தடையாணை உத்தரவின் படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டா. R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அந்த ஐந்து கடைகளும் சீல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் மேற்கண்ட இடங்களில் உள்ள ஐந்து கடைகளிலும் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. மேலே கண்ட ஐந்து கடைகளிலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் அந்த ஐந்து கடைகளுக்கும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்றைய தினமான 10.05.2023 அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் R.லால்வேனா (22.05.2023) அன்று அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த ஐந்து வணிக கடைகளும் கடைகள் சீல் செய்யப்பட்டது. மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில்…. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து
தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர். இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
புகார் எண் : 99 44 95 95 95, 95 85 95 95 95
மாநில புகார் எண் : 9444042322

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
388
25 May, 2023










Comments