குற்றச்சம்பவம் நடைபெறுவதை தடுப்பதற்காகவும், பொதுமக்கள் அச்சமில்லாமல் இருக்கவும், இளைஞர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் திருச்சி மாவட்டம் லால்குடியில் போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் துவங்கி இருந்து சிவன் கோவில், கொடிக்கா தெரு, நன்னிமங்கலம், மும்முடி, சோலைபுரம், எல்.அபிஷேகபுரம், மீன்கார தெரு, பரமசிவபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில்
சுற்றி வந்த இப்பேரணி லால்குடி ரவுண்டானாவில் நிறைவு பெற்றது. இந்த பேரணி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான 50க்கு மேற்பட்ட போலீசார் பேரணியில் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
385
28 May, 2023










Comments