வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் வெளிநாட்டு கரன்சிகளை கடத்திச் செல்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் கடந்த சில மாதங்களாக சுங்கத்துறை அதிகாரிகள் அதிக அளவில் வெளிநாட்டு பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய வருவாய் முன்னறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த மூன்று பயணிகளை அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர்கள் கைப்பையில் மறைத்து கடத்த இருந்த அமெரிக்க டாலர், துபாய் திராம்ஸ், சவுதி ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் இந்திய ரூபாயில் 37.93 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments