திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்காக கோடை காலத்துக்கு குடிநீர் டேங்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இந்த தண்ணீர் டேங்க் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டது.
கத்தரி வெயில் காலத்தில் பயணிகள் குடிநீருக்கு தவிப்பார்கள் என்ற எண்ணத்தில் மாநகராட்சி இந்த தண்ணீர் தொட்டி வைத்தது. ஆனால் இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பபடுவதில் என அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், பயணிகளும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
மாநகராட்சி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும். குடிநீர் என்ற பெயருடன் மட்டுமே உள்ள இந்த தண்ணீர் தொட்டி யார் தாகத்தையும் தீர்க்காது என்று அப்பகுதி மக்களின் புலம்பலாக இருந்தது. இதுகுறித்து திருச்சி விஷன் தளத்தில் நேற்று செய்தி வெளியிட்டது.
அதன் எதிரொலியாக இன்று உடனடியாக மாநகராட்சி நடவடிக்கை எடுத்து தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கும் திருச்சி விஷன் செய்து தளத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments