திருச்சி மாவட்டம் மணப்பாறை முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் மாராட்சிரெட்டியபட்டியை சேர்ந்த எம்பி வெங்கடாசலம் .இவர் கடந்த 20 வருடங்களாக மாவட்ட கவுன்சிலர் ஆகவும் ஒன்றிய கழகச் செயலாளராகவும், முன்னாள் திருச்சி மாவட்ட சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவராகவும் தற்போது அரசு முதல் நிலை ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மணப்பாறை ஒன்றிய கவுன்சிலர் ஆகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவரது அலைபேசியில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடாசலம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஒன்றிய செயலாளரை மிரட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments