எஸ். ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள திருச்சி எஸ். ஆர். எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2023 ம் ஆண்டிற்கான மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகத் தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சாரம் துறையின் முதன்மை செயலாளர் டாக்டர். மணிவாசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் திருச்சி மற்றும் ராமாபுரம் வளாக துணைத்தலைவர் நிரஞ்சன், எஸ் ஆர் எம் திருச்சி வளாக இயக்குனர் டாக்டர் மால்முருகன், இணை இயக்குனர் பாலசுப்ரமணியன், எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் எஸ் ஆர் எம் கல்வி குழும அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் 151 மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்றதை அவர்களது பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments