திருச்சி விமான நிலையத்தில் எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி எடுத்துவரப்பட்ட ரூ. 20 லட்சத்து 37 ஆயிரத்து 126 மதிப்புள்ள 338 கிராம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் வந்த ஆண் பயணி நூதன முறையில் எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 20 லட்சத்து 37 ஆயிரத்து 126 மதிப்புள்ள 338 கிராம் எடையுள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments