திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி காட்டுவாரியில் அரசு அனுமதி இல்லாமல் டிராக்டரில் ஜேசிபி உதவியுடன் கிராவல் மண் ஏற்றி கொண்டிருப்பதாக நவல்பட்டு போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது கிராவல் மண் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக நவல்பட்டு போலீசார் கிராவல் மண் இயற்றிய டிராக்டரின் உரிமையாளர் சூரியூர் பட்டவெளியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தவமணி (42), கும்பகுடியை சேர்ந்த ராஜலிங்கம் மகன் குமார் (43),
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கல்லக்குடி ஊராட்சி கடபட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரங்கசாமி (32) ஆகிய மூன்று பேரையும் கைது செய்ததோடு கிராவல் மண் ஏற்றிய டிராக்டர் டிப்பரோடு மற்றும் ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments