திருச்சிமாந கராட்சி மண்டலம் எண் : 5 கோ அபிஷேகபுரம் அலுவலகம் முன் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்பு சுவர் என்ற பெயரில் இல்லாதவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், வறியவர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினர் பயனடையும் வகையில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் பிறர் பயன்படுத்தும் நிலையில் உள்ள துணிகள், பொம்மைகள், படுக்கை விரிப்புகள். கண்ணாடி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வைக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதுபோல் ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே அன்பு சுவர் செயல்பட்டு வருகிறது. இந்த அன்பு சுவர் நிலையத்தினால் ஏராளமானோர் பயன் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், அன்பு சுவர் செயல்பட்டு வரும் கோ.அபிஷேகபுரம், ஸ்ரீரங்கத்தில் தேடி சென்று பொருட்களை வழங்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும், அந்த பொருட்களை குப்பையில் வீசுவதை தடுக்கும் வகையில் தேடி வந்து மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்கும் வகையில் ஆர்.ஆர்.ஆர்.என்ற திட்டம் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கியது. குறைக்க, மறு பயன்பாடு, மறுசுழற்சி என்ற ஆர்ஆர்ஆர் திட்டத்தின் மூலம் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள 65 வார்டுகளில்

ஸ்ரீரங்கம் மண்டலம் 1ல் வார்டு : 3, 4, 12, 13
அரியமங்கலம் மண்டலம் 2ல் வார்டு 18, 20, 31, 49, 34.
திருவெறும்பூர் மண்டலம் 3ல் வார்டு 36, 38, 45, 46,
பொன்மலை மண்டலம் 4ல் 52, 53, 54, 56, 58, 61, 62, 64, 65
கோ-அபிஷேகபுரம் மண்டலம் 5ல் வார்டு 8, 11, 22, 26, 18, 29, 55 என மொத்தம் 29 வார்டுகளில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் பொதுமக்கள் பயன்பாடற்ற பொருட்களை ஒப்படைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஜூன் 6ம்தேதி வரை (நேற்று) இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்தது.
இந்த ஆர்ஆர்ஆர் மையத்தில் பேப்பர்கள் நெகிழி கண்ணாடி பொருட்கள், துணிகள், படுக்கை விரிப்புகள், புத்தகங்கள் ஆகியவை பெறப்பட்டு, அவற்றை ஸ்ரீரங்கம். கோ -அபிஷேகபுரம் அன்பு சுவர் நிலையத்தில் வைத்து பிறருக்கு பயன்பெறும் வகையில ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சேதமாகி பயன்படுத்த முடியாத பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில், பொதுமக்கள் முன் வந்து பயன்பாடின்றி வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வந்து கொடுத்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
383
09 June, 2023










Comments