Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அடிமனைப்பிரச்சனை – ஆத்திரத்தில் பொதுமக்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கதாதர் கோயில் பிரகாரங்களான 5,6.7ம் பிரகாரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இவற்றின் அடிமனை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமானது என்றும் 320.91 ஏக்கரில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் நிலத்தை விற்கவோ, அடகு வைக்கவோ முடியவில்லை இது ஒரு மாமாங்கமாய் நடந்துவரும் வேளையில் தற்பொழுது அடுத்த குழப்பம் அரங்கேறி இருக்கிறது. இதுதொடர்பாக வழக்கில், கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த நிலம் கோயிலுக்கு பாத்தியப்பட்டது என்று தீர்ப்பளித்தது. இதற்கு மேல்முறையீடு செய்ய ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நகர்நல சங்கங்கள் தயாராகி வருகின்றன.

இப்பிரச்னையை தீர்த்து வைப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்பிறகு 12 ஆண்டுகள் கடந்தும் அடுத்ததடுத்து வந்த எம்.எல்.ஏக்களும் கண்டு கொள்ளாததால் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த அதிரடி நடவடிக்கையை கோயில் நிர்வாகம் இருகண்ப்பில் உகளுக்கான மின் ஸ்ரீரங்கம் கோயில் கமிஷனராக இருந்த மாரிமுத்து, ஸ்ரீரங்கம் மின்வாரிய உதவி பொறியாளருக்கு இதுதொடர்பாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: ஸ்ரீரங்கம் தாலுகா வெள்ளித் திருமுத்தம் கிராமத்தில் டிடி 1027ல் கட்டுப்பட்ட வார்டு ஏ,பி,சி உள்ளடங்கிய பிளாக்குகளில் உள்ள 329.91 ஏக்கர் நிலம் கோயிலுக்கு பாத்தியப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்திலுள்ள கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகள் தொடர்பான வழக்குகளில், அனைத்து கோயில் சொத்துகளும் தனி நபர் அபகரிக்கப்படாமல் பாதுகாக்கபட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஸ்ரீரங்கம் தாலுகா, வெள்ளித்திருமுத்தம் கிராமம் வார்டு ஏபிசி உள்ளடக்கிய கிழக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு உத்திரி வீதி, மேற்கு உத்திர வீதி, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு சித்திரை வீதிகள், கிழக்கு, தெற்கு அடையவளஞ்சான் விதிகள், சாத்தார கோயிலுக்குச் சொந்தமான டிடி. 1027ல் கட்டுப்பட்ட 329.91 ஏக்கர் இடத்தில் பிளாக் வார்டு, டவுன்களில் தனிநபர்கள் பெயரில் மின் இணைப்பு ஏதும் வழங்க வேண்டாம் என ஆட்சேபனை தெரிவிக்கப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்வே எண்களில் உள்ள இடங்கோயில் நிலங்கள் மீட்பு தொடர் நடைபெறும் பான வழக்குகளில் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் இந்த விவரங்களை விரைவாக வழங்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயில் சொத்துகளில் குடியிருந்து வரும் மற்றும் வணிகம் செய்து வரும் விதிகளின்படி வாடகை நிர்ணயம் செய்து வரன்முறை செய்ய வேண்டியுள்ளதால், இந்த வீதிகளில் இன்று வரை மாற்றத்திற்கும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்பு விவரங்கள், மின் இணைப்பு பெறப்பட்ட நபர்கள் குறித்த விபரங்களை கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது இக்கடிதத்தால் ஸ்ரீரங்கம் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 

இதேபோன்று, கோயில் நிர்வாகம் சார்பில், வரிவசூல் தொடர்பாகவும் கடிதம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பத்திரப்பதிவு நிறுத்தத்தால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள மக்கள், மின் இணைப்பு பெறுவதிலும், பெயர் மாற்றம் செய்ய முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால் கவலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால், ஸ்ரீரங்கம் அடிமனை விவகாரம் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் சர்வே எண்களில் ஏகக்குளறுபடிகள் இருக்கின்றன இதுவரை ஸ்ரீரங்கத்தில் மட்டுமே இருந்த பிரச்சனையைக்காட்டி தற்பொழுது திருவானைக்கோவில் பிரகாரங்களிலும் பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை மறுத்து வருவதால் மக்கள் மிகுந்த மனவேதனையில் தவிக்கின்றனர். மின்வாரியம் ஒருபுறம் ஷாக் கொடுக்குமா என்ற கவலை அல்லது அரசு சந்தோஷத்தை கொடுக்குமா என மில்லியன் டாலர் கேள்வி எழுந்திருக்கிறது. மக்களுக்கு தேவை தெளிவான முடிவுகள் அரசு ஆவண செய்திட முன்வரவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *