திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் சாஹஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாமா – “சர்குலேஷன் வேஸ்ட் சொல்யூஷன்” திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி துணை மேயர் உட்பட பெண் மாமன்ற உறுப்பினர்கள் 28 பேர் தெலுங்கானா மாநிலம் சித்தி பேட் நகராட்சியில் வரும் 12,6,2023 முதல் 3 நாள் களப்பயணம் மேற்கொண்டு அந்நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘திடக்கழிவு மேலாண்மை’ பணிகளை பார்வையிட்டு, அது தொடர்பான திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள உள்ளனர். இப்பயணம் மேற்கொள்ள உள்ள பெண் மாமன்ற உறுப்பினர்களை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் இரா. வைத்திநாதன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments