(14.06.2023) அன்று தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை தலைவர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னை மருதம் கமாண்டோ பயிற்சி துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மத்திய மண்டல காவல்துறை தலைவர் க.கார்த்திகேயன், ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கப் பதகக்கத்தை தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் அ.அமல்ராஜ், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் வென்றார்கள்.
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு, வாழ்த்து தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments