இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் வரும் 17.6.2023. சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் தோகைமலை வட்டாரம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் சிறுதானிய அப்பளம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்ப பயிற்சியில் சிறுதானிய அப்பளம் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த செயல்முறை விளக்க பயிற்சி நடைபெற உள்ளது. மேலும் உணவு தரச் சான்று எவ்வாறு பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்படும். எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் தெெரிவித்துள்ளார்.
மேலும் முன் பதிவு செய்ய 9750577700 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். முன் பதிவு மிக அவசியம்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments