அரசின் பல்வேறு திட்டப்பணிகளில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பாக, திருச்சி மணிகண்டம் பஞ்சாயத்து யூனியன் அலுவலக கணக்காளராக இருந்த எம்.கனி என்பவரை, கடந்த 13ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
திருச்சி திருவெறும்பூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலக கணக்காளராக பணியாற்றிய காலத்தில் அங்கும் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, அரசு ஒப்பந்தக்காரர்களின் வைப்புத் தொகை, ஒப்பந்தகாரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை மற்றும் சரக்கு வரி (GST) ஆகியனவற்றை உரிய வங்கி கணக்குகளில் செலுத்தாமல், தனது மகனின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
அவ்வாறாக கையாடல் செய்த பணத்தில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில், கனி தனக்கு சொந்தமாக வேங்கூர் பகுதியில் வீடு கட்டி வருகிறார். இவை அனைத்தும் கணக்கு தணிக்கை குழுவினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments