திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி ஊராட்சியில் உள்ள 4 – வார்டு உறுப்பினர் முனியாண்டி (55), கூலி தொழிலாளி சிவக்குமார் (48) ஆகியோர் நேற்று மதியம் தச்சன்குறிச்சி மதுபான கடையில் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அதன் பின்னர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று சிகிச்சை பலனின்றி சிவகுமார் என்பவர் உயிரிழந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொருவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியாண்டி என்பவரும் உயிரிழந்தார்.
இவர்கள் இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்திய பின்னர் அவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதால் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம்
இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments