திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சியில் உள்ள அரசு மதுபான கடையில் மதுவாங்கி அருந்திய முனியாண்டி (60), சிவக்குமார் (48) இருவரும் நேற்று உயிருக்கு போராடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்ற போது இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் அரசு மதுபான கடையை ஆய்வு செய்யக் கோரிய திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை அதிரடியாக சமயபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் மாவட்ட தலைவரின் கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் மணப்பாறை நகர தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மணப்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 21 பேரை கைது செயதனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments