டி.இ.எல்.சி தேவாலய லிப்ட்டில் சிக்கய 5 பேர் – போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டி.இ.எல்.சி தேவாலய அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மின் தூக்கியில் ஒரு குழந்தை உள்பட 4 பெண்கள் ஏறியச் சென்ற போது திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் மின் தூக்கி பாதியிலேயே நின்றுவிட்டது. லிப்டின் உள்ளே சிக்கிக்கொண்டவர்கள் கூச்சலிடத்தொடங்கினர். உடனடியாக திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையின் மாவட்ட உதவி அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையில் 7பேர் கொண்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி லிப்ட்யில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து மீட்கப்பட்ட தேவதை (61),கேத்தரின் (60), பிரீத்தி (27), பிரகாஷ் (61), சாரா ஜென்சி (70) ஆகியோரிடம் பாலக்கரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
379
18 June, 2023










Comments