Saturday, August 23, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

முசிறி அரசு மதுபான கடையில் டின் பீரில் ஸ்டிக்கர் மேல் ஸ்டிக்கர் – மதுபிரியர்கள் அச்சம்

திருச்சி மாவட்டம் முசிறியில்  திருச்சி – சேலம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை எண் 10360, 10362 ஆகிய இரண்டு கடைகளில் மதுபிரியர்கள் டின் பீர் மதுவகை வாங்கி அருந்தி உள்ளனர்.

அப்போது டின் பீரில் உள்புறம் உள்ள லேபிளில் only for sale Delhi என்றும் வெளிபுறம் லேபிளில் only for sale Tamilnadu என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதை கண்டு இது போலி மதுபானமா இருக்குமோ என சந்தேகம் அடைந்தனர்.

இதே போல சில தினங்கள் முன்பு (SNJ) வேறு நிறுவன பீர் பாட்டில் உள்ளே மூடி மற்றும் கலங்கலாக பீர் உள்ளதை கண்டு அச்சமடைந்து பாட்டிலை திருப்பி கடைகளில் கொண்டு சென்று கொடுக்கும் போது அதை வாங்க கடை மேலாளர் மறுத்துள்ளார். இவ்விரு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது.

இச்சம்பவம் பீர்குடிப்பவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்து கலால் துறை அல்லது மதுவிலக்கு அமலாக்க பிரிவு உரிய விசாரணை நடத்தி மதுஅருந்துபவர்களின் குழப்பத்தை போக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *