Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

மாவட்ட வளர்ச்சித்துறை அலகில் ஊழியர் பற்றாக்குறை. அதிகரிக்கும் பணிச்சுமை மற்றும் அரசியல் தலையீடு காரணமாக எண்ணற்ற இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கூகுள் மீட் மாலை நேர ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை வாட்டிவதைக்கும் நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.

எனவே வளர்ச்சித்துறை ஊழியர்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட ஆட்சித்தலைவரிடம் பெருந்திரள் முறையீடு சொல்வது என்று (17.06.2023)  நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. வளர்ச்சித்துறை ஊழியர்களை மனநோயாளியாக மாற்றும் உதவி நீட்ட அலுவலரின் (ஊதியம் மற்றும் வேலை) தினசரி ஆய்வு கூட்டத்தை (வாக்கி டாக்கி மூலம்) கைவிடக் கோருதல், 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை காரணமின்றி வசையாகுதல், மனஅழுத்தத்தை உண்டாக்கும் போங்கினை முற்றிலுல் கையிடக் கோரூதல், மாவட்ட நிலை அலுவலர்களால் நடத்தப்பதம் ஆய்வு கூட்டங்கள் இரவு நேரங்களிலும் கூடுதல், தேவையற்ற கூகுள் ஆய்வு கூட்டங்களை கைவிடக் கோருதல், உதவியாளர் நிலையில் பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்க கோருதல்

பதவி உயர்வுகளை காலதாமதமின்றி வழங்குதல், சொந்த காரணங்களுக்காக விடுமுறையில் செல்லும் பணியார் மீது பொய்யாக குற்றச்சாக்குகளின் பேரில் பணியிலிருந்து விடுவிப்பதை தவிர்த்தல் மற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி துறை அலுவலருக்கு உடனடியாக பணியிடம் வழங்க கோகுதல், மாவட்ட ஆட்சியராக வளர்ச்சிப் பிரியில் நிலுவையாக இருக்கும் குற்றச்சாட்டு குறிப்பானைகள் மீது விரைந்து இறுதிஉத்தரவு வழங்மக் கோருல்,

ஓய்வு பெறும் அலுவலர்களால் ஏற்படும் காலிப் பணியிடங்கள்ள பதவி உயர்வின் மூலம் நிரப்புவதில் ஏற்படும் காலதாமதங்களால் சம்மந்தப்பட்ட பணியார்களுக்கு ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு அலுவர்கள் ஓய்வு பெறும் நாளன்றே அப்பணியிடத்தை பதவி உயர்வில் நிரப்பிட கோருதல், வளர்ச்சித்துறையின் மூலம் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இதர பணிகளை ஊராட்சிகளில் நிறைவேற்றி தரும் இத்துறையின் ஆணிவேர்களாகிய தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள 

ஊராட்சி செயலாளர்களுக்கு மீளப் பணியிடம் விரைந்து வழங்கக் கோருதல், உள்ளிட்ட இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பெருந்திரள் முறையீடு போரட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது. இப்போராட்டத்தில் வளர்ச்சித்துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *