திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சோலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மனைவி அஞ்சம்மாள் (33), சுரேஷின் தாயார் பாப்பாத்தி (52). இவர்கள் இருவரும் வீட்டில் கரண்ட் இல்லாததால் வீட்டின் வெளியே வராண்டாவில் இருவரும் உறங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் படுத்து இருந்த அஞ்சம்மாள் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தாலிக்கொடியையும், பாப்பாத்தி அணிந்திருந்த இரண்டு பவுன் செயினையும் மர்ம நபர்கள் தூங்கும்போது பறித்து சென்றுள்ளனர்,
செயின் பறிக்கப்பட்டதை தொடர்ந்து இரு பெண்களும் கூச்சலிடமே அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்தவர்கள் திருடர்களை தேடிசென்று உள்ளனர் ஆனால் திருடிய நபர்கள் காட்டுக்குள் ஓடிவிட்டனர் இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் அஞ்சம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments