திருச்சி நகரியம் கோட்டம் பொன்னநகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால் நாளை (30.06.2023) காலை 11:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை பார்சன் அபார்ட்மென்ட், சக்தி நகர் 10 வது கிராஸ், ராம கிருஸ்ணா நகர்12 மற்றும் 3வது கிராஸ், ஆல்பா நகர் 1, 2, மற்றும் 3வது கிராஸ்,
ஆல்பா நகர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி நகரியம் இயக்கலும் காத்தலும், செயற்பொறியாளர் பொறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments