ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி Dr.B.C.Roy நினைவாகக் கொண்டாடப்படும் தேசிய மருத்துவர்கள் தினத்தை திருச்சி SRM மருத்துவக் கல்லூரியில் கொண்டாப்பட்டது.
மருத்துவ தினத்தில் மருத்துவ மாணவ மாணவியர்கள் சேர்ந்து மருத்துவ சின்னமான “Caduceus” யை ஏற்படுத்தி கொண்டாடினார்கள். மேலும் திருச்சி SRM மருத்துவக் கல்லூரியின் துணை மருத்துவப் படிப்பு மாணவ மாணவியர்கள் “Stethoscope” வடிவில் நின்று தங்கள் மருத்துவ ஆசிரியர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்தனர்.
திருச்சி மற்றும் இராமாபுரம் SRM கல்விக் குழுமங்களின் தலைவர் Dr.R.சிவகுமார் ஆலோசனையின்படி, திருச்சி வளாக இணை இயக்குனர் Dr.N.பாலசுரமணியன் மற்றும் டீன் Dr.S.ரேவதி மருத்துவர்களைப் பாராட்டி பேசினர்.
முன்னதாக மருத்துவ மாணவர்கள் வண்ண பலூன்களை பறக்க விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
378
01 July, 2023










Comments