திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் மணிப்பூர் வன்முறையில் இருந்து பொதுமக்கள் மீண்டு அமைதி வாழ்க்கை வாழ கிறிஸ்தவர்கள் மெழுகுதிரி ஏந்தி பேராலய வளாகத்திற்குள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக பேராலய பங்குத்தந்தை சவரிராஜ் மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைதி திரும்பவும், மீண்டும் அவர்கள் இயல்பு வாழ்க்கை வாழ இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments