திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து தக்காளியை ஏற்றிக்கொண்டு மினி லாரி அரியமங்கலம் பால்பண்ணை நோக்கி சென்றது.
அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பால் பண்ணை அருகே சென்ற போது மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த 1.5 டன் தக்காளி சாலையில் கொட்டியது.
இதுக்குறித்து தகவலறிந்து கோட்டை காவல்துறையினர் விரைந்து வந்து சாலையில் சிதறி கிடந்த தாக்காளிகளை அப்பகுதி மக்களுடன் அப்புறப்படுத்தினர்.
இந்த மினி லாரி விபத்துக்குளான காரணம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments