திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவர் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சபுரா பீவி (35) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் மீது பொன்மலை மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் சதீஷ்குமார் கஞ்சா பழக்கத்திற்கு அடிமை ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சதீஷ்குமாருக்கும் சபுரா பீவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை சதீஷ்குமார் சபுரா பீவியை அழைத்துக் கொண்டு சென்றதாகவும் பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை என சதீஷ்குமாரின் குடும்பத்தினர் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் பொன்மலை போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில் பழைய பொன்மலை மகளிர் காவல் நிலையம் பின்புறம் உள்ள பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் ஏற்கனவே அவர்கள் குடியிருந்து வந்ததாகவும், அதன் அடிப்படையில் அங்கு சென்று பொன்மலை போலீசார் பார்த்தப்பொழுது சபுரா பீவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு பொன்மலை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பார்த்தப் போது சபுராபீவியை முதலில் தூக்கிட்டு சதீஷ்குமார் கொள்ள முயற்சி செய்த நிலையில் சபராபீவி உயிர்போகாதால் சபுரா பீவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சபராபீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை பொன்மலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments