திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமணி அரசி மலையாளி கோயில் தேர் திருவிழா கடந்த 10 நாட் களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை சிறுகமணி மலையப்பநகர் பகுதியில் தேர் சென்றபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் மீதும் கற்கள் வீசப்பட்டது. இது குறித்து இரு தரப்பிலும் அளித்த புகாரின்பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுகமணி மலையப்பநகர் பகுதியை சேர்ந்த அப்பு(எ)கார்த்தி, விஸ்வநாதன், சஞ்சய்,ராம்குமார், கண்ணன், சதீஸ், பூபதி, அரங்கன், ரமேஸ், ராஜேஷ், ராஜ ராஜசேகர், ராஜு, சிறுகமணி கார்த்தி, கதிரவன் உட்பட 15 பேரை கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments