கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெணை, 300 மீ பருத்தி திரியில் மகா தீபம் மாலை 5.30 மணியளவில் ஏற்றப்படுகிறது.
Advertisement
இதையடுத்து 273 அடி உயரம் 417 படிக்கட்டுகள் கொண்ட மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
உபயதாரர்கள், சிவாச்சாரியார்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு சிறப்பு பூஜை & மகா தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் விஜயராணி தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement
நாளை ஏற்றப்படும் மகாதீபம் தொடர்ந்து 3 தினங்களுக்கு எரியும்.
Comments